உன்னை நான் வைத்த கண் வாங்காமல்,
===================================================
=====================================================
நான் பார்த்த போது,
நீ சொன்னாய்,
"உன்ன கொல்ல போறேன் பார்" என்று..
என்றோ செத்தவனை மீண்டும் எப்படி
கொல்வாயடி நீ..
பார்த்த தருணத்திலேயே என்னை,
கூறு போட்டு கொன்றவளடி நீ!!
===================================================
காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு,
மயிர் கூச்செறியும் மானசீக விளையாட்டு,
உன்னில் பறித்த உயிரை,
எனக்குள் சேர்க்கும்.
என்னில் பறித்த உயிரை,
உன்னுள் ஊற்றும் .
உருக உருக பெருகும்,
பெருக பெருக உருகும்.
எரிய எரிய கரையும்,
கரைய கரைய எரியும்.
ஈர் உயிரும்,
ஓர் உயிராய் மாறும்.!!
காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு!!
=============================================
=============================================
மானுடம் - கடவுளின் படைப்பு,
காதல் - சாத்தானின் படைப்பு..
வாழ்க்கையை வாழ
மானுடத்தை - படைத்தான் கடவுள்!!
வாழ்க்கையை புரிந்துகொள்ள,
காதலை - படைத்தான் சாத்தான்!!
=====================================================
காதல் - சாத்தானின் படைப்பு..
வாழ்க்கையை வாழ
மானுடத்தை - படைத்தான் கடவுள்!!
வாழ்க்கையை புரிந்துகொள்ள,
காதலை - படைத்தான் சாத்தான்!!
=====================================================
உன்னை நினைக்கும் நேரங்களில்,
என்னை மறந்து இருப்பேன்!!
உன்னை மறக்கும் நேரம் வந்தால்,
மண்ணில் புதைந்து இருப்பேன்!!
=====================================================
No comments:
Post a Comment