Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும் , அரசியல் வெற்றியும் !!

சிங்கங்களை வேட்டையாடிய நரிகள்!!

மானங்கெட்ட மத்திய அரசு !!
தரங்கெட்ட தமிழக அரசு !!

பெண்மைக்குள் ஆண்மையை கண்ட நாட்கள் !!
ஆண்மையையே மலடாக்கிய தடியடி நாட்கள் !!

உடைக்கப்பட்டது கைகளையும், கால்களையும் அல்ல !!
ஒருங்கிணைக்கப்பட்ட இதயங்களை!!

கேட்டது 4 மணிநேர அவகாசம் !! - ஆனால்,
கிடைத்ததோ தடியடி தள்ளாட்டம் !!

இருட்டறையிலும் இடி விழுந்திருக்கும்,
கருவறையிலிருந்து போராடிய என் சிசுவிற்கு !!

ஏழு நாள் போராட்டத்தை ,
அரைநாளில் ஏழரையாக்கிவிட்டனர் !!

அடங்காநல்லூரான என் தமிழகத்தை ,
அலங்கோலநல்லூராய் மாற்றிவிட்டனர் !!

தெளிந்த நீரில் கலக்கப்பட்டது அரசியல் சாயம்!!
அதனால் களக்கப்பட்டதோ என் இளைஞனின் வேகம் !!

கலங்காதே தமிழா!!
காலம் கைகொடுக்கும் !!
நாளை உன்னுடையதுதான் !!

துணிந்து போராடு!!
உலகமே உன்னோடு !!

ஜல்லிக்கட்டு போராட்டம் !!

கட்டிய காளைகளுக்காக ,
அவிழ்த்துவிட்ட சிங்கங்களாய்,
போராடிக் கொண்டிருக்கிறார்கள்,
எங்கள் சினம் கொண்ட தமிழ் இளைஞர்கள்...!!

கணம் நீதிபதி அவர்களே,
காட்டு சிங்கங்களை அடக்க கேட்டீர்களே,
அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம், 

உங்களால் முடிந்தால், வெகுண்டெழுந்திருக்கும்,
என் தமிழ் நாட்டு சிங்கங்களை அடக்கி காட்டுங்கள்!!

அலங்காநல்லூர் விஷயத்தில், 
தமிழ் நாட்டையே அடங்காநல்லூராய் மாற்றி விட்டீர்கள்!!

சோடை போகாது, என் மறத்தமிழினம்!!

எங்கெங்கோ சிதறுண்டிருந்த,
என் இனத்தை,
ஒன்றாய் சேர்த்த பெருமை,
வெட்கம் கெட்ட PETA வை சேரட்டும்!!

அதற்கு என் நடு விரல் சலாம் போடட்டும்!!

வாழ்வில் முதல் முறையாய் ஏங்குகிறேன்,
தமிழ் நாட்டில் இல்லையே என்றும்,
மாணவனாய் இல்லையே என்றும்.!!

- தமிழ் நாட்டில் இல்லாத தமிழனாய்,
அயல் நாட்டில் இருந்தாலும் எப்போதும் மறத்தமிழனாய் !!
பாலசுப்பிரமணியன் கணபதி...

Sunday, January 1, 2017

கடைகோடி இந்தியனின் கூக்குரல் இது!! 50 நாட்களின் கூத்து இது !!

கடைகோடி இந்தியனின் கூக்குரல் இது!!
50 நாட்களின் கூத்து இது !!

ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ,
இதய அடைப்பு வந்த நாள் !!

எம்போர்மிங் கூட செய்ய முடியாத,
காரணமற்ற கார்டியாக் அர்ரெஸ்ட் வந்த நாள் !!

500, 1000 செல்லாது என்று அறிவித்த நாள் !!

கருப்பு பணம் ஒழிய வைத்த முதல் அடி !!
சாமானியனின் மேல் விழுந்த மரண அடி!!

இயற்க்கை சீற்றத்தையே மிஞ்சிய,
செயற்கை சீற்றம்!!

சுனாமி, வெள்ளம், புயல் ,
சிக்கியவர்களே மீண்டுவிட்டனர் 50 நாட்களுக்குள்!!

இன்னமும் மீள வழி இல்லை,
இந்த சீற்றத்தில் சிக்கியவர்கள்!!

ஒரு ரூபாயின் மதிப்பை உணர்த்திய நாள் !!
வங்கி கணக்கில் 1999 ரூபாய் ,
ATM இல் எடுக்க வழி இல்லை!!
ATM இல் பணமே இல்லை என்பது அடுத்த கதை!!

எங்கோ கேட்டது !!

மனைவி இல்லதாதவன் மனைவியை தேடுவது போலவும் ,
மனைவி இருப்பவன் மனைவியை மாற்றவும் முடியாமல்,
தூக்கி போடவும் முடியாமல் தவிப்பது போலவும்,

2000 ருபாய் நோட்டு இல்லாதவன் அதை தேடுகிறான்,
2000 ரூபாய் நோட்டு இருப்பவன் அதை மாற்றவும் முடியாமல்,
தூக்கி போடவும் முடியாமல் தவிக்கிறான் !!

டிமாண்டிஷன்!!
நாம் ஒழிய நினைத்தவை!!

விவசாய கடன்,
வேலையில்லா மாணவனின் கல்வி கடன்!!

ஆனால், ஒழிந்தவை ,

பெரு முதலைகளின் கடன்கள்,
கருப்பை வெள்ளையோக்கிய டிரஸ்ட்கள் !!

ஒழித்த கருப்பு பணத்திலிருந்து பெற நினைத்தது,
வறுமையின் வீழ்ச்சி!!
ஆனால் பெற்றது ,
3600 கோடியில் வீர சிவாஜி சிலை !!

பெரு முதலையின் கடன் வார கடன்,
அவனோ மாடல் அழகிகள் கொண்டு ,
2017 காலண்டர் அடித்துக்கொண்டு இருக்கிறான் !!

அரசு அறிக்கை வரும் ஒரு வாரத்துக்கு முன்,
அறிக்கை வருகிறது சிம் கார்டு இலவசம் என்று!!
அனைத்து கருப்பும்,
வெள்ளையானது இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் !!

என் தேசம் விசித்தரமானது,
பணத்துக்காக ஆடையில்லா ஒரு கூட்டம்,
பணமின்றி ஆடை வாங்க வழி இல்லா ஒரு கூட்டம் !!

தங்கள் உணவிற்கு பணம் இல்லை என்பார்!!
'டங்கள்' படத்திற்கு 100 கோடி வசூல் தருவார்!!

ஏன் உங்களால் முடியாதா!!,
சியாச்சின்ல நம்ம ராணுவம்!!
என்கிறது ஆளும் அரசாங்கம் !!

குறை கூறுங்கள் எதிர் கட்சியை ,
என்ன செய்தார்கள் அவர்கள் ஆளும்போது என்று !

சிக்கனத்தை கற்று கொள்ளவேண்டும்,
நமது எதிர் கட்சியிடம் இருந்து!!
ஒரு நாள் 2000 வங்கியில் எடுத்து ,
இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!!

பணத்தை நிரப்ப சொன்னது ATM ல் , - ஆனால்,
பிடிபட்டு கொண்டு இருக்கிறது ஆளும் கட்சிக்காரர் வீட்டில் ...

கருப்பு பணத்தை சாமானியரிடம் தேடாதீர்,
அவர்களிடம் மாட்ட வெள்ளை பணம் கூட இல்லை !!

இன்னமுமா நினைத்துக்கொண்டு இருக்குறீர்கள்,
கருப்பு பணம் ஒழியும் என்று !!

இன்று இரவிலிருந்து,
500, 1000 செல்லாது என்று அறிவித்ததுக்கு பதில்,
இன்று இரவிலிருந்து,
ஜாதி ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்து இருந்தால்,
குறைந்தது இந்தியா கல்வியிலாவது முன்னேறும்,
வறுமையும் குறைந்து இருக்கும் !!

கடைகோடி இந்தியனின் கூக்குரல் இது!!
50 நாளின் கூத்து இது !!

என்றும் உங்களுடன்,
பாலசுப்ரமணியன் கணபதி !!

http://naannaanaga.blogspot.com/