Wednesday, April 3, 2013

காதல்

உன்னை நான் வைத்த கண் வாங்காமல்,
நான் பார்த்த போது,
நீ சொன்னாய்,
"உன்ன கொல்ல போறேன் பார்" என்று..

என்றோ செத்தவனை மீண்டும் எப்படி 
கொல்வாயடி நீ..

பார்த்த தருணத்திலேயே என்னை,
கூறு போட்டு கொன்றவளடி நீ!!


===================================================

காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு,
மயிர் கூச்செறியும் மானசீக விளையாட்டு,

உன்னில் பறித்த உயிரை,
எனக்குள் சேர்க்கும்.

என்னில் பறித்த உயிரை,
உன்னுள் ஊற்றும் .

உருக உருக பெருகும்,
பெருக பெருக உருகும்.

எரிய எரிய கரையும்,
கரைய கரைய எரியும்.

ஈர் உயிரும்,
ஓர் உயிராய் மாறும்.!!

காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு!!
=============================================

மானுடம் - கடவுளின் படைப்பு,
காதல் - சாத்தானின் படைப்பு..

வாழ்க்கையை வாழ
மானுடத்தை - படைத்தான் கடவுள்!!

வாழ்க்கையை புரிந்துகொள்ள,
காதலை - படைத்தான் சாத்தான்!!
=====================================================

உன்னை நினைக்கும் நேரங்களில்,
என்னை மறந்து இருப்பேன்!!

உன்னை மறக்கும் நேரம் வந்தால்,
மண்ணில் புதைந்து இருப்பேன்!!

=====================================================

Wednesday, March 27, 2013

என்னவள்

பறக்காத பட்டாம்பூச்சி, 
நடக்கும் தேவதை,

- என்னவள்
==================================================

மருதாணியிட்டு உன்னை நீ அலங்கரிப்பதாய் நினைத்தாய்,
மருதாணியோ அதை நீ அலங்கரிப்பதாய் நினைத்துக்கொண்டது..

===================================================

நாங்களும் எங்கள் ஈழமும்



நாங்களும் எங்கள் ஈழமும்

பிட்சா, பர்கர் என்ற பெயரில்,
வேண்டாத பலவற்றை,
கௌரவத்திற்காக தின்று..

டெலிவரி என்ற பெயரில்,
மருத்துவர்களே பார்த்திடாத அளவிற்கு,
டெலிவரியை பார்த்து..

டெக்னாலஜி என்ற பெயரில்,
புதிது புதியதாய்,
பலவற்றை கற்று..

கண்ணில் கருவளையத்தையும்,
மண்டையில் வழுக்கையும்,
பெற்ற சாதாரண  IT- யவாதிகள் நாங்கள்..

பணத்திற்காக பிணத்தை கூட,
தின்னும் அரசியல்வாதியல்ல .
பணத்திற்காக பிணமாக கூட,
துணியும் IT- யவாதிகள் நாங்கள்..

பார்க்கிறோம் தினசரி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் ,
பகிர்கிறோம் சமுக வலைதளங்களில்,
ஈழ தமிழர்களைப்பற்றி..

எங்களுக்கும் உண்டு,
எங்கள் தொப்புள்கொடியின் உணர்வு..
தோள் கொடுக்கத்தான் வழியில்லாமல்..

தொப்புள்கொடிக்கு தோள் கொடுத்தால்,
வீட்டில் எனை பெற்ற தொப்புள் பசியால் வாடுமே என்றெண்ணி,
எங்கள் ஈழ எண்ணங்களை அடுப்பில் வைத்து,
நெருப்பில் வாழ்கிறோம்..

குமரி கண்டத்தை,
இந்தியப்பெருங்கடல் கற்பழித்தான்,
பிறந்த குழந்தைக்கு இலங்கை என்று பெயரிட்டான்.

என்றோ ஆங்கில தொலைக்கட்சியில் பார்த்த நினைவு,
வேட்டையாடிய மானின் வயிற்றில் கருவை பார்த்த புலி,
மானிடம் மண்டியிட்டு மடிந்ததாய்..
அதுபோல் - மடிவானா, அந்த கொடுங்கோலன்??
அது சரி,
புலியாய் இருந்திருந்தால் மடிந்திருப்பன் அன்றே..
அவன் தான் நரியாயிற்றே..
எப்படி மடிவான் தந்திரமானவன்..

இங்கோ,
பாலச்சந்திரன் என்ற,
பெயரறிந்த பாலகன்,
பெயரே அறியாத பாலகர்கள்.
எத்தனை பெண்கள்,
எத்தனை இளவட்டங்கள்..
மண்ணில் மட்கிய மானுடங்கள்..
தாங்குமா தமிழகம்..

பெண்கள் பின்னே சுற்றி,
சினிமா செய்தி கேட்டு,
மதுவிற்கு அடிமையாய்,
இல்லை என் தமிழக இளைஞர்கள்!!

ஈழத்தின் இழுபறி,
இழுத்தது இளைஞர்களை..

ஊரையே உறையவைத்தாய்,
உலகையே உருகுலைததாய்,
உண்ணாவிரதமிருந்து..

உன்னதாமாய் போராடு ,
உயிரை மட்டும் மிச்சம்விட்டு!!
உருவம் பெறும் உன் தியாகம்!!

தும்பை விட்டுவிட்டோம்,
இனி வாலையாவது பிடிப்போம்.

இளைஞனே, முன்னால் நீ போ,
பின்னால் வருகிறோம்,
உன் வழித்துணையாய் நடக்கிறோம்..

வெற்றி நிச்சயம் - நீ,
வெல்வது சத்தியம்.

என்றும் உன்னுடன்,
IT- யவாதிகள்..