Wednesday, March 27, 2013

நாங்களும் எங்கள் ஈழமும்



நாங்களும் எங்கள் ஈழமும்

பிட்சா, பர்கர் என்ற பெயரில்,
வேண்டாத பலவற்றை,
கௌரவத்திற்காக தின்று..

டெலிவரி என்ற பெயரில்,
மருத்துவர்களே பார்த்திடாத அளவிற்கு,
டெலிவரியை பார்த்து..

டெக்னாலஜி என்ற பெயரில்,
புதிது புதியதாய்,
பலவற்றை கற்று..

கண்ணில் கருவளையத்தையும்,
மண்டையில் வழுக்கையும்,
பெற்ற சாதாரண  IT- யவாதிகள் நாங்கள்..

பணத்திற்காக பிணத்தை கூட,
தின்னும் அரசியல்வாதியல்ல .
பணத்திற்காக பிணமாக கூட,
துணியும் IT- யவாதிகள் நாங்கள்..

பார்க்கிறோம் தினசரி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் ,
பகிர்கிறோம் சமுக வலைதளங்களில்,
ஈழ தமிழர்களைப்பற்றி..

எங்களுக்கும் உண்டு,
எங்கள் தொப்புள்கொடியின் உணர்வு..
தோள் கொடுக்கத்தான் வழியில்லாமல்..

தொப்புள்கொடிக்கு தோள் கொடுத்தால்,
வீட்டில் எனை பெற்ற தொப்புள் பசியால் வாடுமே என்றெண்ணி,
எங்கள் ஈழ எண்ணங்களை அடுப்பில் வைத்து,
நெருப்பில் வாழ்கிறோம்..

குமரி கண்டத்தை,
இந்தியப்பெருங்கடல் கற்பழித்தான்,
பிறந்த குழந்தைக்கு இலங்கை என்று பெயரிட்டான்.

என்றோ ஆங்கில தொலைக்கட்சியில் பார்த்த நினைவு,
வேட்டையாடிய மானின் வயிற்றில் கருவை பார்த்த புலி,
மானிடம் மண்டியிட்டு மடிந்ததாய்..
அதுபோல் - மடிவானா, அந்த கொடுங்கோலன்??
அது சரி,
புலியாய் இருந்திருந்தால் மடிந்திருப்பன் அன்றே..
அவன் தான் நரியாயிற்றே..
எப்படி மடிவான் தந்திரமானவன்..

இங்கோ,
பாலச்சந்திரன் என்ற,
பெயரறிந்த பாலகன்,
பெயரே அறியாத பாலகர்கள்.
எத்தனை பெண்கள்,
எத்தனை இளவட்டங்கள்..
மண்ணில் மட்கிய மானுடங்கள்..
தாங்குமா தமிழகம்..

பெண்கள் பின்னே சுற்றி,
சினிமா செய்தி கேட்டு,
மதுவிற்கு அடிமையாய்,
இல்லை என் தமிழக இளைஞர்கள்!!

ஈழத்தின் இழுபறி,
இழுத்தது இளைஞர்களை..

ஊரையே உறையவைத்தாய்,
உலகையே உருகுலைததாய்,
உண்ணாவிரதமிருந்து..

உன்னதாமாய் போராடு ,
உயிரை மட்டும் மிச்சம்விட்டு!!
உருவம் பெறும் உன் தியாகம்!!

தும்பை விட்டுவிட்டோம்,
இனி வாலையாவது பிடிப்போம்.

இளைஞனே, முன்னால் நீ போ,
பின்னால் வருகிறோம்,
உன் வழித்துணையாய் நடக்கிறோம்..

வெற்றி நிச்சயம் - நீ,
வெல்வது சத்தியம்.

என்றும் உன்னுடன்,
IT- யவாதிகள்..

No comments:

Post a Comment