அவளோ மழையை ரசித்துக்கொண்டு இருக்கிறாள்,
மழையோ அவளை ரசித்துக்கொண்டு இருக்கிறது..
=====================================================
மழையாக மாற நினைக்கிறேன்,
நீ மழையில் நனைந்தால்..
வெயிலாக மாற நினைக்கிறேன்,
நீ வெயிலில் நடந்தால் ..
நிலவாக மாற நினைக்கிறேன்,
நீ பௌர்ணமியில் உழன்றால்..
வியர்வையாக மாற நினைக்கிறேன்,
உன் நெற்றியில் நனைந்தால்.
அஃறிணையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..
உயர்திணையாக மாற்றுவாய் என்ற நம்பிக்கையில்,
உன் பெயரில் என் பெயரை சேர்ப்பாய் என்ற நம்பிக்கையில்.

காதல் அழகானது!!!
கடிகாரமாய் நம் காதல்,
கடிகார முள்ளாய் நாமும், நம் ஊடலும்!!
பெரிய முள்ளாய் நான்,
சிறிய முள்ளாய் நீ,
நொடி முள்ளாய் நம் ஊடல்!!
அனுதினமும் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் உன் பின்னால் நான்,
அனுதினமும் சுற்ற வைக்கிறாய் உன் பின்னால் நீ,
அனுதினமும் சுற்றுகிறது நம் பின்னால் நம் ஊடல், நம்மை சேர்க்கவும், பிரிக்கவும்!!
சில நிமிடம் சேர்ந்து இருந்தோம்,
பல நிமிடம் பிரிந்து இருந்தோம்,
சேரும்சில நொடிக்காக காத்து
இருந்தோம்!!
யாவும் புரிந்தும்,
நானும் உன்னை சுற்றுவதை நிறுத்தவில்லை,
நீயும் என்னை சுற்றவைப்பதை நிறுத்தவில்லை!!
காதல் அழகானது!!!
=====================================================
அவள் கண்களில் எனது கனாவினை காணும்,
=====================================================
அவள் கண்களில் எனது கனாவினை காணும்,
அழகிய உணர்வுதான்,
காதல்!!
=====================================================
கனவில் கடவுள் வந்தார்!!
காதலிக்க சொன்னார்..
காதல்!!
=====================================================
கனவில் கடவுள் வந்தார்!!
காதலிக்க சொன்னார்..
காரணம் கேட்டேன்,
கண்கள் காவியம் பேசும்,
தள்ளாடும் கால்கள் தானாகவோடும்,
தனிமையில் தினமும் பேசுவாய்,
கூட்டத்தில் மட்டும் மௌனமாவாய்,
முட்டாளாயினும் முழுமை பெறுவாய்,
நடக்கவே மறுப்பாய்,
ஆனால் பறக்கத் தொடங்குவாய்,
காற்றில் கதைகள் பேசுவாய்,
தூக்கத்தில் புலம்பச் செய்வாய்,
துடிப்பதையே வேலையாகச் செய்வாய்,
அவள் விழி தேடி ஏங்குவாய்,
அவள் வழி தேடியே தூங்குவாய்,
உன்னை அவளிடம் தொலைப்பாய்,
அவளை உனக்குள் தேடுவாய்,
காரணங்களை கட்டவிழ்த்தார்,
அவ்வளவு அழகா காதல்!!
காதலிக்க சொன்னேன் கடவுளை,
காணாமல் போய்விட்டார்!!
கடவுள் கூறிய காரணத்துடன் என் காரணத்தையும் சேர்த்தேன்.
கடவுளையே காணாமல் செய்யும்,
இந்த பாழாய் போன காதல் என்று...

வெண்ணிற இரவு,
-- பௌர்ணமியாய் என் அருகில் அவள்..
=====================================================
வெண்ணிற இரவு,
-- பௌர்ணமியாய் என் அருகில் அவள்..
=====================================================
என் அருகில் அவள் இருந்த நிமிடம்,
கண் முழுதும் கண்ணீர் நிறைந்த தருணம்..
கைகள் கோர்த்ததற்கே கரைந்து போனேன்,
இதயத்தை மட்டும் இணைத்து இருந்தால் இறந்தே போயிருப்பேன்..
வாரத்தின் ஆறு நாட்கள் அலுவலக அலைச்சலில்,
வாரத்தின் ஏழாவது நாள் மட்டும் அவளது அரவணைப்பில்,
அலுவலகத்தில் உழலும் நாள் அலுக்கிறது,
உன்னுடன் உழலும் நாள் பிடிக்கிறது..
என்னை நீ சுற்றவும்,
உன்னை நான் சுற்றவும் தான்,
இன்னமும் இந்த பூமி சுற்றிக்கொண்டு இருக்கிறது..

கூறு கெட்டவள் அவள் - என்னை
கூறு போட்டவள் அவள்,
உழன்ற நிமிடங்களையெல்லாம்,
உளற வைத்தவள் அவள்
சென்ற தருணங்களையெல்லாம்,
சாக்கடையாய் மாற்றியவள் அவள்,
தோழியாய் இருந்தே,
தொலைந்து போனவள் அவள்..
காதலியாய் இருந்தே,
காணாமல் போனவள் அவள்..
பாறையான என்னை,
பாழாய் ஆக்கியவள் அவள்..
நேசிக்க வந்தவனை
நெருப்பில் தள்ளியவள் அவள்..
தகுமோ பெண்ணே உனக்கு,
தாளா துயரில் என்னை தள்ளிவிட்டாயே..
தகுமோ பெண்ணே உனக்கு,
துயர நெருப்பில் என்னை சுட்டுவிட்டாயே..
சேர்ந்தால் வாழ்க்கையாம்,
பிரிந்தால் வரலாறாம்,
நம் காதலை வரலாற்றில் சேர்த்த பெருமை,
உன்னையே சேரட்டும்..

நினைவு தெரியாத வயதில் "அம்மா" என்று அழைத்தவள்,
என் அன்னையானாள்,
நினைவு தெரிந்த வயதில் "அம்மா" என்று அழைக்கிறேன்,
என் தாரமாவாள்....
=====================================================
என் அன்னையானாள்,
நினைவு தெரிந்த வயதில் "அம்மா" என்று அழைக்கிறேன்,
என் தாரமாவாள்....
=====================================================
நிச்சயம் அவள் சர்க்கச்காரியாகதான் இருக்க முடியும்,
நித்தமும் என் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி,
அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கிறாளே..
=====================================================
=====================================================
கால தேவன் கசக்கிய,
காகிதங்கள்,
இரவு தாயின் இரவல்,
குழந்தைகள்,
-- விலைமாதர்கள்
=====================================================
இரவு தாயின் இரவல்,
குழந்தைகள்,
-- விலைமாதர்கள்
=====================================================
பச்சை தண்ணீரில் குளித்தால்,
காய்ச்சல் வருமாம் - சரிதான்.
ஆனால், நீ குளித்ததால்,
பச்சை தண்ணீருக்கல்லவா காய்ச்சல் வந்துவிட்டது!!..
=====================================================
ஒற்றை முடி,
உதிர்ந்த பூ,
காய்ச்சல் வருமாம் - சரிதான்.
ஆனால், நீ குளித்ததால்,
பச்சை தண்ணீருக்கல்லவா காய்ச்சல் வந்துவிட்டது!!..
=====================================================
ஒற்றை முடி,
உதிர்ந்த பூ,
வெட்டிய நகம்,
உடைந்த வளையல்துண்டு,
பறக்கும் துப்பட்டா,
தூக்கியெறிந்த பேனா,
கசக்கிய காகிதம்,
இவைகளில் தானடி,
இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது,
பாழாய் போன என் ஜீவன்..
மூன்று வார்த்தை சொன்னால்,
முச்ஜென்மம் வாழ்வேனடி,
மூன்று வார்த்தை சொல்லவில்லையென்றாலும்,
முச்ஜென்மம் வாழ்வேனடி,
சொன்னால் உன்னோடு,
சொல்லவில்லையென்றால் உன் நினைவோடு..
காலம் எல்லாம் வாழுமடி நமது காதல்,
காலமே மாறினாலும் மாறாது நமது காதல்..

பல நூறு ஓவியம்,
வரைந்துப் பார்த்தேன் தினமும்,
ஆனால், ஒன்றும் உன் போல்,
அழகாய் தெரியவில்லை,
உன்னை விட ஓர் ஓவியம்,
அழகாய் நான் வரைந்தால்,
அது நம் குழந்தையாகதான்,
இருக்க முடியும்..

திருடியதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது,
கடவுளின் நீதிமன்றத்தில்..
இதயத்தை திருடினேன்,
திருமணம் என்ற ஆயுள் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
=====================================================
கடவுளின் நீதிமன்றத்தில்..
இதயத்தை திருடினேன்,
திருமணம் என்ற ஆயுள் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
=====================================================
முத்தமிட்டால் சக்கரை நோய் வருமாம்,
ஆராய்ச்சியின் புதிய முடிவு,
- சரிதான்,
உன்னை போல் ஓர் இனிப்பானவள் முத்தமிட்டால்,
யாருக்குதான் சர்க்கரை நோய் வராது??
=====================================================
ஆராய்ச்சியின் புதிய முடிவு,
- சரிதான்,
உன்னை போல் ஓர் இனிப்பானவள் முத்தமிட்டால்,
யாருக்குதான் சர்க்கரை நோய் வராது??
=====================================================
நான் உன்னை அதிகம் நேசிக்கிறேனா - இல்லை,
என் பேனா உன்னை அதிகம் நேசிக்கிறதா?
என்னை விட அதிகமாய்,
உன் பெயரை எழுதிக்கொண்டு இருக்கிறதே!!..
=====================================================
என் பேனா உன்னை அதிகம் நேசிக்கிறதா?
என்னை விட அதிகமாய்,
உன் பெயரை எழுதிக்கொண்டு இருக்கிறதே!!..
=====================================================
வாய் மட்டும் தான் உண்ணும் உறுப்பென்று,
நினைத்திருந்தேன் உனை பார்க்கும் முன்புவரை,
விழிகள் கூட உண்ணும் என்று,
அறிந்துகொண்டேன் உன்னை பார்த்த பின்பு,
நிதமும் உன் அழகை தின்றுகொண்டே இருக்கிறதே,
என் இரு விழிகள்..
=====================================================
நீ என்ன அட்சயபாத்திரமோ,
எவ்வளவோ தின்றாலும்,
உன் அழகு சற்றும் குறைந்தபாடே இல்லையே..

உயிர் உடலுக்குள் இருக்குமாம்,
யார் சொன்னது??
என் உயிர் எனக்கு முன்,
நடமாடிக்கொண்டு இருக்கிறது,
உனது ரூபத்தில்....
=====================================================
யார் சொன்னது??
என் உயிர் எனக்கு முன்,
நடமாடிக்கொண்டு இருக்கிறது,
உனது ரூபத்தில்....
=====================================================
முந்தி பிறந்தவனே,
முன்னமே அழியாமல் வளர்ந்தவனே,
நீந்திச் சென்றவனே,
நில்லாமல் இலக்கை அடைந்தவனே!!
உன் சாதனை மகத்தானது...
முளைக்கும் முன்னமே போராட தெரிந்தவன் நீ,
முளைத்த பின்னே போராட மறுப்பது நியாயமா??
மானுடம் கடினம் போராட மறுப்பவனுக்கு,
மானுடம் புனிதம் போராட துடிப்பவனுக்கு..
நீராடும் வரை தான் அருவி,
போராடும் வரை தான் மனிதன்,
போராடு,
மனிதன் என்ற பேரோடு,
வாழ்க்கை என்ன வாழ்க்கை,
வா, வாழ்ந்துதான் பார்ப்போமே!!..

உன் அழகை,
முகம் பார்க்கும் கண்ணாடியில்,
நீ சரிபார்க்கும்போது,
கண்ணாடி,
தன் அழகை சரிசெய்துகொள்கிறது,
நீ அதை பார்க்கிறாய் என்று!!..

70 கி மீ வேகத்தில் பயணம் செய்யும்,
எனது மோட்டோர் வாகனம்,
நீ என்னுடன் பயணிக்கும்போது மட்டும்,
40 கி மீ வேகத்தை கூட தாண்ட மறுக்கிறது...
உன்னோடு செல்லும் பயணம்,
சீக்கிரம் முடிந்துவிடும் என்றெண்ணியோ,
இல்லை,
உன் ஸ்பரிசத்தில் கிடைக்கும்,
நேசம் முடிந்துவிடும் என்றெண்ணியோ!!
=====================================================
எனது மோட்டோர் வாகனம்,
நீ என்னுடன் பயணிக்கும்போது மட்டும்,
40 கி மீ வேகத்தை கூட தாண்ட மறுக்கிறது...
உன்னோடு செல்லும் பயணம்,
சீக்கிரம் முடிந்துவிடும் என்றெண்ணியோ,
இல்லை,
உன் ஸ்பரிசத்தில் கிடைக்கும்,
நேசம் முடிந்துவிடும் என்றெண்ணியோ!!
=====================================================
காதல் மேம்பாலம் கட்ட,
கடவுள் உத்தரவிட்டாரோ,
நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே,
என் இதயத்தில்...
=====================================================
கடவுள் உத்தரவிட்டாரோ,
நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே,
என் இதயத்தில்...
=====================================================
உன் ஸ்பரிசத்தில் பரிதவிக்கிறேன்,
உன் காதலில் பயணிக்கிறேன்.
தோள்கள் உரசியும்,
தோழமையோடு சுற்றினோம்,
விரல்கள் பட்டும்,
விரசமின்றி நடந்தோம்.
ஞாயிறு வரும் - உன்
ஞாபகம் எனை தொடும்.
கை பிடித்து நடந்தே,
காலங்கள் வாழும்,
தோள் சாய்ந்து சென்றே,
நேரங்கள் நீளும்,
வாரத்தில் ஆறு நாள் நான் தனியனாய்,
வாரத்தில் ஓர் நாள் உன் துணையனாய்!!
ஒன்றில் ஆறு கழியுமா?
உன்னோடு சுற்றும் ஓர் நாளுக்காக,
என் ஆறு நாட்களும் கழிகின்றன!!..
இப்போது சொல்,
ஒன்றில் ஆறு கழியும்தானே!!
உன்னோடு சென்ற மறு நாள்,
உயிரோடு உறைந்த வெறும் நாள்!
என் தோளோடு உரசிய,
உன் தோள் தேடுவேன்,
என் விரலோடு பதிந்த,
உன் ஸ்பரிசம் தேடுவேன்,
நீ என்னோடு வருவதாய்,
நான் நினைப்பேன்,
என் உருவோடு ஒன்றாய்,
உனை சேர்ப்பேன்..
எனக்கு தெரியும் நீயும் இப்படித்தான் என்று!!
என் நினைவோடு நீயும் இப்படித்தான் என்று!!
=====================================================
மருத்துவம் படிக்காத,
அறுவை சிகிச்சை நிபுணர் அவள்.
எனக்குள் இதய மாற்று அறுவை சிகிச்சையை,
அழகாய் செய்து விட்டாள்!!..
=====================================================
பூக்கள் எல்லாம்
=====================================================
பூக்கள் எல்லாம்
போராட்டம் செய்கின்றன..
தினமும் பூக்கும் பூவான,
உன்னை மட்டும்,
யாரும் பறிக்கவில்லையே என்று!!..
பறித்த பூக்கள் எல்லாம்,
மகிழ்ச்சியுறும் அவற்றை,
பறித்தவள் நீயாய் இருந்தால்!!
பறிக்காத பூக்கள் எல்லாம்,
கவலைகொள்ளும் அவற்றை ,
பறிக்காமல் நீ சென்றால்!!
உதிர்ந்த பூக்கள் எல்லாம்,
உவகை கொள்ளும்,
உன் கூந்தலிலிருந்து
உதிர்ந்து இருந்தால்!!..
உன் கை படாத பூக்கள் எல்லாம்,
உயிரை விட்டு,
கல்லறை செல்லவே ஆசைப்படும்!!

No comments:
Post a Comment