Monday, November 23, 2020

இணைய கல்வி இல்லா கல்வி ஆகட்டும் !!

 

அப்பா தூக்கி பல்துலக்கி ,

அம்மா தூக்கி குளிப்பாட்டி ,

கொஞ்சமாய் சாப்பாடு தானாய்,

நான் உண்டு பள்ளிக்கு போனேன்!!


நேற்றைய பாடத்தை வீட்லேயே விட்டேன் !!

போட்ட கணக்கை காற்றோடு விட்டேன் !!

வீதிவரை வந்து விளையாடி விட்டேன் !!

நண்பனின் டிபன் பாக்ஸ் ஐ பிடுங்கி தின்னேன் !!

அடுத்தவன் நோட்டில் கிறுக்கி வைத்தேன் !!

வாத்தியாரின் நாற்காலியில் முள்ளினை தைத்தேன்!!

மைதான மண்ணில் விளையாடி,

ஆரோக்கிய தூக்கம் கொண்டேன் !!


திடீரெனெ அன்னை எழுப்பினார் என்னை!!


பல் துலக்க சொன்னாள் - கையில்,

மடி கணினி தந்தாள் !!

உண்ண ஆப்பிள் மறுத்து,

ஆன்லைன் ஆப்பிள் வகுப்பை திணித்தாள்!!


கண்ட காட்சியெல்லாம் கனவாகி போச்சு,

காற்றோடு சேர்ந்து காணாமல் போச்சு !!


கொரானா ஆடிய கூத்து !!

இயல் வாழ்க்கை இல்லாமல் போச்சு !!


ஒன்றாய் இணைய ஓர் தளமுமில்லை!!

இணையதளத்தில் இணைந்தும் ஒன்றும் பயனில்லை !!

கண்ட ஒளியெல்லாம் காணொளியானது !!

தொலைபேசி தொல்லைபேசி ஆனது !!


தொட்டு தழுவிய தோழமைக்கு மாற்றா,

தொல்லை தரும் இணைய கல்வி??


கொஞ்சும் மழலை பேசும் எங்களுக்கா,

கோணலான இந்த கல்வி ??


குமுறுகிறோம் கொஞ்சம் கேளுங்கள்!!

இணைய கல்வி இல்லா கல்வி ஆகட்டும் !!


ஏட்டு சுரைக்காய் கறிக்கு தான் உதவாது ,

இது டேப் லேட்டு சுரைக்காய்,

எதற்கு உதவுமென்றே யாருக்குமே தெரியாது !!


இவன்,

பாலசுப்ரமணியன் கணபதி,



No comments:

Post a Comment