Saturday, September 2, 2017

அனிதா!! நீட் கசக்கிய பூங்கொத்து!! நீட் அழித்த நீதியின் நெடுங்குரல் !!

அனிதா!!

நீட் கசக்கிய பூங்கொத்து!!
நீட் அழித்த நீதியின் நெடுங்குரல் !!

குழுமூர் தொலைத்த,
குடிசையில் விளைந்த குலவிளக்கு !!

படிக்க AC ரூம் இல்லை,
காபி போட்டு ஆறுதல் சொல்ல அன்னை மடி இல்லை,
நினைத்த நேரம் செல்ல கழிவறை இல்லை,
இளைப்பாற கட்டில் மெத்தையும் கூட  இல்லை,
பாடம் சொல்லி தர தகப்பனும் படிக்கவில்லை,
டியூஷன் செல்ல பொருளாதாரமும் துணையில்லை !!

சுயம்புவாய் படித்தாய்,
1176 மதிப்பெண்கள் எடுத்தாய் !!


என்ன என்ன கனவு கண்டிருப்பாய்!!
தீயோடு எரிந்து போகவா நீ  நினைத்தாய் ??


மருத்துவராகி சமூகத்துக்கு சேவை செய்ய துடித்தாய் !
மண்ணோடு மக்கி போகவா நீ நினைத்தாய் !!

காலத்தோடு கால் கலந்து ஓட நினைத்திருப்பாய்!! - இன்று
காலனோடு கை கோர்த்து,
காற்றோடு கலந்து விட்டாய்  !!

மரணம் என்றுமே எதற்குமே,
தீர்வாகாது சகோதரியே !!

தீக்கு இறையாகிவிட்டாய்!!
தேடினாலும் கிடைக்க மாட்டாய் !!

உள்ளம் கெட்டவர்களை எதிர்த்து,
உச்சநீதிமன்றம் சென்ற உண்மையே !!
வருமா உன் போன்ற துணிவு இனி ஒருவருக்கு !!

ஆளும் அயோகியர்களையும்,
ஆள துடிக்கும் கயவர்களையுமா நம்பினாய்??

உன்னை மண்ணோடு சேர்த்துக்கொள்ள,
அந்த விண்ணுக்கு கூட விருப்பம் இல்லை,
வடித்து கொண்டிருக்கிறது கண்ணீரை மழையாய்  !!

விதையாய் மண்ணுக்குள் விழுந்துவிட்டாய் !!
மரமாய் மீண்டும் நீ முளைப்பாய் !!

உன்னோடு முடியட்டும் தியாக சாவு !!
உன்னால் விடியட்டும் ஏழை மாணவர்களின் கிழக்கு !!

நாட்டை ஆளுபவர்கள்,
ஆண்டு கொண்டு இருப்பதையோ மக்களை !!

மத்தியில் மதியற்றவர்கள்,
மாநிலத்தில் மதிகெட்டவர்கள்!!

தாங்குமா தமிழகம் !!


மதிப்பெண் குறைவாய் பெற்றவன் மாண்ட காலம் போய் ,
முதல் மதிப்பெண் பெற்றவன் தன்னையே மாய்த்து கொள்ளும் காலம் வந்து விட்டது!

இது தான் புதிய பிறந்த இந்தியாவோ !!

பேய் அரசாண்டால்,
பிணம் தின்னும் சாத்திரங்கள் !!

எழ வேண்டும் தமிழா !

எழும் காலம் வந்துவிட்டது !!

வேண்டாம் இன்னும் ஓர் இழப்பு !!
இன்றோடு முடியட்டும் ஏழை மாணவர்களின்  பரிதவிப்பு !!

கோவத்தோடும் கண்ணீரோடும்,
பாலசுப்ரமணியன் கணபதி !!






No comments:

Post a Comment